Breaking News

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண 1 லட்சம் பேரிடம் கையெழுத்து

குடியாத்தம் 

குடியாத்தம் நகர போக்குவரத்து நெரிசலுக்கு  தீர்வு காண 1 லட்சம் பேரிடம்  கையெழுத்து இயக்கம்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையத்தில் ஓடும் கவுண்டன்ய மகா நதி ஆற்றில், ஓடும் வெள்ளத்தால் கடந்த 3 மாதமாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.

தரைப்பால வழி துண்டிக்கப்பட்டு, காமராஜர் மேம்பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடக்கிறது.

நகரில் நேதாஜி சவுக்கில் இருந்து பஸ் ஸ்டேண்ட் வரவே சில நேரங்களில் ஓரிரு மணி நேரமாகிறது. இதனால் தங்கம் நகர், பச்சையம்மன் கோயில் தெரு, ஜனப்ப தெரு, தாழையாத்தம், போஸ்பேட்டை போன்ற குடியிருப்பு பகுதிகளில் சாலைகளை போல் வாகனங்கள் செல்கின்றன. மக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை.

ஆகவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு உடனே நடவடிக்கை தேவை.

தரைப்பாலம் சேதம் அடைந்ததால், வெள்ளம் குறைந்தாலும் போக்குவரத்து நடக்காது.

ஆகவே புறவழிச்சாலை, ரிங் ரோடு, கூடுதல் மேம்பாலம் என மாற்றுவழியை உடனே வேலூர் மாவட்ட நிர்வாகமும், மத்திய,  மாநில அரசுகளும் உடனே மேற்கொள்ள வேண்டும்.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை போக்குவரத்தால் இணைக்கும் குடியாத்தம் நகருக்கு தீர்வு தேவை.

இதனை வலியுறுத்தி பெளத்த சமூக, கல்வி அறக்கட்டளை சார்பில் அனைத்து கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவோம்.

போலீஸாரும் பணிச்சுமையில் தவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தின் தொழில் நகரில் போக்குவரத்து தொல்லை தீருமா....

 

No comments

Thank you for your comments