மழைநீர் கால்வாயில் இருந்து விஷவாயு வெளியேறி பொதுமக்கள் மூச்சுத்திணறல்... கடையடைப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் அதிகப்படியான மழைபொழிவானது காணப்பட்டது.
இதனால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.இதனால் மாநகராட்சி நிர்வாகமானது தாழ்வான பகுதிகளிலும்,தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் எடுத்தும்,வடிகால்களை சீரமைக்கு பணிகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜீவகர்லால் வீதி பகுதியின் வழியாக மழைநீர் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த வடிகால்வாயினை மழைநீரானது செல்ல முடியாதவாறு இருந்து வந்தது.
இதனால் மாநகராட்சி ஆணையர் உத்திரவின் பெயரில் கடந்த 15
நாட்களுக்கு முன்பு வடிகால்வாயின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தரைகள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது அக்கான்கிரீட் தரைகள் அகற்றப்பட்டதன் காரணமாக அக்கால்வாயில் முறையின்றி கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்பால் அதிலிருந்து வீஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
மேலும் அப்பகுதிமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தி வருகின்றனர். திறந்தவெளி கால்வாயில் இருந்து வெளியேறும் வாய்வு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சு திணறல் கண் எரிச்சல் தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதோடு மயக்கமடைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்கள் குறிப்பாக அப்போது இருக்கக்கூடிய வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஒரே நாளில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்த ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மழைநீர் கால்வாயில் இருந்து தொடர்ச்சியாக விஷவாயு வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்
இது குறித்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் கேட்கும்போது அப்பகுதியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்
No comments
Thank you for your comments