Breaking News

வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வரும் பன்றிகள்... பெரும் வேதனையில் விவசாயிகள்

வேலூர், டிச.15-

வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை பகுதியில் பன்றிகளால் கொசுத்தொல்லை மர்ம காய்ச்சல் தொற்றும் அபாயம் உள்ளதாகவும் சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை அருகே சீனிவாசன் அவர்களின் சொந்த நிலம் 4.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்துள்ளார்.

 சீனிவாசன் நிலம் அருகே பொன்னை பஞ்சாயத்து சார்பாக குப்பை கழிவுகளை கொட்டப்பட்டு வருகிறது.

பொண்ணை பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருபவர் பஞ்சா, மற்றும் அவருடைய மனைவி. இவர்கள் கணவன் மனைவி இருவரும் பொன்னை பஞ்சாயத்து தூய்மை  பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 இவர்கள் பஞ்சாயத்து சார்பாக குப்பை கொட்டும் இடத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார்.  அதேபோன்று ராணி என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்த்து வருகின்றனர்.


இவர்கள் வளர்க்கும் பன்றிகளால் விவசாயிகள் வெங்கடேசன் சுப்பிரமணி கேசவன் இவர்களுடைய நிலத்தை பன்றிகள் நாசம் செய்வதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் பொன்னை காவல் நிலையத்திலும் பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

பன்றிகளால் கொசுத்தொல்லை மர்ம காய்ச்சல் தொற்றும் அபாயம் உள்ளதாகவும் சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பன்றிகளால் பல நோய்கள் ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments

Thank you for your comments