ஆண்டிப்பட்டி புதூரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறக்க வலுக்கும் கோரிக்கை
தருமபுரி
அரூரை அடுத்த ஆண்டிப்பட்டி புதூரில் பகுதி நேர நியாய விலை கடை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கொளகம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது ஆண்டிப்பட்டி புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இங்குள்ள மக்கள் கடந்த ஆண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், ஆண்டிப்பட்டி புதூரில் 3 மாதங்கள் மட்டும் தற்காலிக பகுதிநேர நியாயவிலைக்கடை இயங்கியது.
தற்போது இந்த கடையை மூடிவிட்டதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதனால், ஆண்டிப்பட்டி புதூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில், பொது விநியோக திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்களை பெறுகின்றனர்.
இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் முதியவர்கள், மகளிர் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர்.
எனவே, கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டிப்பட்டி புதூரில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
No comments
Thank you for your comments