மேல்பங்காரம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்...
சென்னை:
தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" திட்டத்தை தமிழகத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட முட்டவாக்கம் ஊராட்சி மற்றும் மேல்பங்காரம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் நித்யா சுகுமார் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு-பேனா-திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து துவக்கி வைத்தார்.
பின்பு மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை பற்றி காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் நித்யா சுகுமார் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பாடல்களை பாடி விளக்கமளித்து மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை எளிதில் புரிந்துகொள்வது எப்படி என்று எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் முட்டவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ்பாபு, துணை தலைவர் வேண்டா கோபால், கிளை செயலாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் தாமல் ராஜா, ஊராட்சியின் தலைமை ஆசிரியர்கள் கௌரி, ஜெயந்தி மற்றும் பெற்றோர்கள்-ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments