வாலாஜாபாத்-அவளூர் தரைபாலம் சீரமைப்பு பணி... போக்குவரத்து ஒரு வாரத்தில் துவங்கும்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட வாலாஜாபாத்-அவளூர் தரைபாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்ட நிலையில் போக்குவரத்து ஒரு வாரத்தில் துவங்கும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வட கிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - அவலூரை இனைக்கும் தரைபாலமானது  பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.இதனால் கடந்த ஒரு மாதங்களாக போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவலூர்,நெய்குப்பம், அமணம்பாக்கம் இளையனாவேலூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராம மக்கள் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்ல இரண்டு கிலோ மீட்டர்தூரம் கடக்க வேண்டியதை தரைபாலம் துண்டிக்கப்பட்டதால் 40 கிலோ மீட்டர்தூரம் கடந்து சென்று வருகின்றனர் .

இந்த சூழ்நிலையில் இன்று இரண்டு இராட்சத கிரேன் மூலம் தரைபாலத்தை சரி செய்யும் பணிகளை அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.இன்னும் ஒரு வாரத்தில் வாலாஜாபாத் - அவலூர் தரைபாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments