Breaking News

கனமழையால் வாழ்வாதாரம் இழந்தவருக்கு மாடு வழங்கல்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என பல வகையில் காஞ்சிபுரத்தை தாக்கி வரலாறு காணாத கனமழை கடந்த ஒரு மாதமாக பெய்தது.

இதில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு செய்யாறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை நீர் சென்று வருகிறது.

இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை இழந்து வாழ்வாதாரமும் கேள்விக்குறியான நிலையில் இருந்து வந்தனர்.

இதை அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன்  வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள இரு  பசுக்களை  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் காலையில்  ஒப்படைத்தார்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் ஒரு நபர் தனக்கு அரசு திட்டத்தின் கீழ் ஆடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

இதனை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பரிசீலித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மன் அவர்களை தொடர்பு கொண்டு இந்த நபருக்கு மாடு வழங்கலாம் என ஆலோசனை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் அந்த நபருக்கு கன்றுடன் ஒரு பசுமாடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம் ,  திமுக மாவட்ட பிரதிநிதி சுகுமார்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments