அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சி சார்பாக ரயில்வே நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் ஒன்றியச் செயலாளர் கூரம் செல்வம் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வெள்ளகுளம் குட்டி வாலாஜாபாத் ரமேஷ் வளத்தூர் கார்த்தி சிங்கடிவக்கம் ஞானவேல் பாஸ்கரன் போன்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments