Breaking News

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீப்பிடித்த கார்...

கோவை:

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் கார் திடீரென்று தீப்பிடித்து எரித்தது. இதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இவர் கோவை நியூசித்தாபுதூர் திருமலைசாமி விதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 75). கோவை கோர்ட்டில் நீதிபதியின் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 

இவர் ஓய்வூதியம் தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்துக்கு தனது காரில் வந்தார். அங்கு அவர் வேலையை முடிந்துவிட்டு  காரில் புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியேவந்தார். அப்போது அவருடைய காரின் முன்பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியயது.

இதைப்பார்த்து அதிரச்சி அடைந்த நஞ்சப்பன் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதையடுத்து ஒரு சில நிமிடங்களில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. .

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல்அறிந்த கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.   தீயணைப்பு வாகணத்தில் இருந்து தண்ணீரை பிய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின்  குளிர் சாதன மின்கசிவு  காரணமாக காரில் தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறித்த மாவட்ட ஆட்சியர்  சமீரன் தீப்பிடித்து எரிந்த காரை  பார்வையிட்டார்.

No comments

Thank you for your comments