Breaking News

விவசாயிகளின் வேதனையை கேட்டறிந்தார் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்

பாப்பிரெட்டிப்பட்டி :

1995 ஆம் ஆண்டு கிராமப்புற விவசாய அடிப்படையிலான நடுத்தர அளவிலான ஏற்றுமதி சார்ந்த தொழிலாக வரலட்சுமி ஸ்டார்ச்  நிறுவனம் நிறுவப்பட்டது. 

மரவள்ளிக்கிழங்குகள் மற்றும் மக்காச்சோள கர்னல்களில் இருந்து மரவள்ளிக்கிழங்கு சாகோ (சபுதானா), சோள மாவுச்சத்து மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து ஆகியவற்றை உற்பத்தி செய்ய விரிவுபடுத்தப்பட்ட தொழில் நிறுவனம், தற்போது சொந்த ஊரில் உள்ள விவாசாயிகளுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் வகையில் நிறுவனத்தை சுற்றிலும் 54 ஏக்கர் அளவில் சீமைக்கருவேல மரங்களின் விதையை தூவி வளர்த்து வருகிறது. 

இதனால் பயிர்கள் கருகுகின்றன என்பதே விவசாயிகளின் வேதனை . இதனால் வரலட்சுமி ஸ்டார்ச் நிறுவனத்தின் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் நிறுவனத்தின் பின்புறம்  பார்வையிட்டு அதிர்ந்து போனார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே அரசாங்கம் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள சீமகருவேலமரத்தை அகற்ற சொல்லி இருக்கிறது. அதற்கு எதிர்மறையாக இந்த நிறுவனம் செய்லபடுவது மனவேதனை அளிக்கிறது.

இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை ஆற்றில் கலப்பதும் கழிவு நீரை உறிஞ்சும் வகையில் சீமைக்கருவேல மரங்களை ஒரு காடாகவே 54 ஏக்கர் அளவில் வளர்த்து வருகிறது. 

இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் பலமுறை இங்கே இருக்கும் அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார்கள். 

அதன் அடிப்படையில் பார்வையிட வந்தபோது. விவசாய நிலங்கள் கறுப்படைந்துள்ளது. குடிநீர் கிணறுகள் கறுப்படைந்துள்ளது.  தயவு செய்து இந்த நிறுவனம் விவசாய சூழ்நிலைகளை உணர்ந்து கழிவு நீரை  ஆற்றில் கலப்பதை நிறுத்தவேண்டும், மற்றும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றவேண்டும். 

மேலும், வடமாநில இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கும் எண்ணத்தை விட்டுவிட்டு தமிழ்நாடு இளைஞர்களுக்கும் பணிகளை  வழங்கவேண்டும். 

கழிவு நீரை மறுசுழற்சி இயந்திரத்தின் மூலம் பயன்படுத்தி விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஒருமுறையாவது இந்த நிறுவனத்தை சுற்றிப்பார்த்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார், இதனால் விவசாயிகளுக்கு ஒரு வெளிச்சமான வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்.

No comments

Thank you for your comments