சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது
வேலூர் :
வேலூர் மேல்செங்கனத்தம் மலைப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது...
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த மேல் செங்க நத்தம் மலைப்பகுதியில் நள்ளிரவில் ஆந்திராவை சேர்ந்த சாம்ராஜ் (45) மற்றும் சுதாகர் (43) இரண்டு பேர் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றனர்
அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்
அங்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் இருவரையும் பிடித்து சென்று வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
வனத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments