Breaking News

இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி

வேலூர்:

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்...

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளமான  https://www.fisheries.tn.gov.in/  லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் எண். 16, 5வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர்-632006 அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 28.12.2021  பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மேலும் அலுவலக தொலைப்பேசி எண்-0416 2240329 மற்றும் மின்னஞ்சல் முகவரி adfifvellore@gmail.com  மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments