Breaking News

01.01.2022 அன்று முதல் வேலூரில் சாலை போக்குவரத்து மாற்றம்...

வேலூர்:

வேலூர் மாவட்டம் மற்றும் நகரம் கிரீன் சர்க்கிள் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேலூர் மற்றும் இதர பகுதியிலிருந்து காட்பாடி மற்றும் ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்கள் பழைய பைபாஸ் மற்றும் காட்பாடி ரோடு சந்திக்கும் சாலையின் இடதுபுறமாக அமைந்துள்ள அம்பிகா பெட்ரோல் பங்க் மற்றும் ராமஜெயம் பஸ் ரூட் அமைந்துள்ள இடத்தின் வழியே கடந்து இடதுபுறம் உள்ள சர்வீஸ் சாலையின் வழியே சென்று சேண்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் வலதுபுறமாக திரும்பி காட்பாடி நோக்கி அமைந்துள்ள புதிய மேம்பாலம் வழியாக செல்லுமாறு பொது மக்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்.

வேலூரிருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள்  கிரீன் சர்க்கிள் வருவதை தவிர்த்தல் வேண்டும். மேலும் வாலாஜாவிலிருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் ஆறு வழச்சாலையில் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தை கடந்து சென்று இடதுபுற சர்வீஸ் சாலை வழியாகச் சென்று சேண்பாக்கம் மேம்பாலத்தின் கீழே சென்று காட்பாடிக்கு செல்ல வேண்டும். மேற்கண்ட நடைமுறையானது வரும் 01.01.2022 முதல் அமலுக்கு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 


No comments

Thank you for your comments