Breaking News

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகான புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பொய்கை ஊராட்சி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகான புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் அடிக்கல் நாட்டினார். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்  ஏ.பி.நந்தகுமார்  முன்னிலையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஒன்றிய செயலாளர்கள் பி.வெங்கடேசன், கோ.குமாரபாண்டியன் ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன் மருத்துவர்கள், செவிலியர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments