Breaking News

2022 புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு தடை..!

வேலூர், டிச.30-

கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், வேலூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இதுபோன்ற இதர இடங்களில் 31.12.2021 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் ஒமைக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.  

எனவே, வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2021 அன்று இரவு நடத்தப்படும் 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments