130 பயனாளிகளுக்கு வீடுகட்ட வேலை ஆணைகள் வழங்கல்
வேலூர், டிச.30-
நேற்று (29.12.2021) வேலூர் மாவட்டம் புதூர் ஊராட்சி கோவிந்த ரெட்டி பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுசுவர் கல்வெட்டை திறந்து வைத்தல் மற்றும் 2021-2022ம் ஆண்டு PMAY திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 130 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 12 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்ட வேலை ஆணைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையிலும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
வேலூர் மாவட்டம் புதூர் ஊராட்சி கோவிந்த ரெட்டிபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட சுற்றுசுவர் கல்வெட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 2021-2022ம் ஆண்டு PMAY திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 130 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 12 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்ட வேலை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த விழாவில் வேலூர் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர், வேலூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் , வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உள்ளட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments