வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் உருக்கமாக பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08-12-2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் லெப்டினட் ஜெனரல் ஹாலோன் (KAHALON) அவர்களிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் உள்ள பதிவேட்டில் தனது இரங்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார்.பதிவேட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியதாவது,தாய்திருநாட்டின் வீரத்திருமகன்
விபத்தில் உயிர் இழந்ததிற்கு
நாடு பெறுகிற துன்பத்தில்
நானும் இணைந்து எனது
வீரவணக்கத்தை செலுத்துகிறேன்!
இவ்வாறு இரங்கல் புத்தகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்தார்.இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.
செயாதிகள் மிக அருமை
ReplyDeleteசெய்திகள் மிக அருமை
Deleteசெய்திகள் மிக அருமை
ReplyDelete