Breaking News

அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பெருநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடைபெற்றவுள்ள சூழ்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் புகைபடத்துடன் கூடிய இறுதி  வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் பெற்றுக்கொண்டனர். 

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் உத்திரமேரூர், ஸ்ரீபெருமந்தூர், வாலாஜாபாத் ஆகிய பெருநகராட்சிக்கு மட்டும் புகைபடத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டது.

ஆண் வாக்காளர்கள் 1.33.124, பெண் வாக்காளர்கள் 1.42.691 மூன்றாம் பாலினம் 32 பேர் என மொத்தம் 2.75.847 வாக்காளர்கள் உள்ளனர்.

No comments

Thank you for your comments