ஈரோட்டில் கோவை திருமண்டல மக்கள் இயக்கம் துவக்க விழா....
ஈரோடு:
ஈரோட்டில், கோவை திருமண்டல மக்கள் இயக்கம் துவக்க விழா சமத்துவ கிறிஸ்மஸ் கலைவிழா 2021 ஈரோடு சி.எஸ்.ஐ.பிரப் திருச்சபை அரங்கில் நடைப்பெற்றது. இந்த கலைவிழாவை ஈ. திருமகன் ஈவெரா எம் எல் ஏ துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, ஆயர் எடின்புரோ, தமிழ்நாடு ஜமாத்துல் உல்லமா சபை செயலாளர் பைசூர் ரஹ்மான் அவர்கள், ரோமன் கத்தோலிக்க திருச்சபை அருட்தந்தை பிரசன்னா, கோவை திருமண்டல மக்கள் இயக்க தலைவர் எம். ஏசையன், செயலாளர் ராஜேஷ்குமார், பொருளாளர் எம். ராபர்ட் கிறிஸ்டோபர் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
மண்டல காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர், குப்பண்ணா சந்துரு, முன்னாள் ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயகண்ணா, மண்டல பொதுச்செயலாளர் சபீர், மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செந்தில் ராஜா, திண்டல் பாலாஜி, தம்பி கார்த்தி மற்றும் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments