Breaking News

36வது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா

ஈரோடு:

ஈரோட்டில் 16/12/2021 அன்று    நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புதுடெல்லி மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் 36வது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நடைப்பெற்றது. 

இந்த தொடக்கவிழாவை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.திருமகன் ஈவெரா  அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து   புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார். இதில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர்  த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார். 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸின்  மண்டல மேலாளர்   ஆர். ரங்கராஜன் அவர்கள், சிபிஐ மாவட்ட செயலாளர்  கே. ஆர். திருநாவுக்கரசர், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி,  மாவட்ட துணைத்தலைவர் பி. ராஜேஷ் ராஜப்பா,  மண்டல காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர், ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜயகண்ணா, சிவா என்கிற சிவக்குமார், குப்பண்ணா சந்துரு, தம்பி கார்த்தி, திண்டல் பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




No comments

Thank you for your comments