Breaking News

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை ...

ஈரோடு:

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை  நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது பதவி காலத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் சேர்த்தாக கூறி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சில தினங்களுக்கு முன் 69 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். 


சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் அடிப்படையில் இன்று (20.12.2021)  மீண்டும் ஈரோட்டில் 3 இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  


ஈரோடு சாந்தாங்காடு பகுதியிலுள்ள தங்கமணியின்  உறவினர்  குமார் என்கின்ற கோபாலகிருஷ்ணன்  என்பவருடைய வீட்டிலும், ஒண்டிக்காரன் பாளையத்திலுள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் கல்லூரி நண்பர் செந்தில்நாதன் வீடு மற்றும் திண்டல் சக்தி நகரிலுள்ள பாலசுந்தரம் என்பவருடைய வீட்டிலும் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த 3 இடங்களில் நடைபெற்ற  சோதனையில் 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments