நந்திவரம் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்மருவத்தூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில், இன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை நந்திவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தப்படும் விவரம் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இன்று மாநிலம் முழுவதும் 15-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 17.12.2021 வரை 7 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரத்து 493 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 4 கோடியே 81 இலட்சத்து 57 ஆயிரத்து 452 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 3 கோடியே 3 இலட்சத்து 93 ஆயிரத்து 41 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments