Breaking News

விடுதியில் வழங்கப்பட்ட உணவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து பரவிய செய்தி உண்மையா... ?

காஞ்சிபுரம்:

விடுதியில் வழங்கப்பட்ட உணவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து பரவிய செய்தி வதந்தி என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தும் ஒரு பகுதி பெண் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்..  

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள்.  ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகளவு தொழிற்சாலைகள் இப்பகுதியில் இருப்பதால், அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். 

பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை அந்த தொழிற்சாலை மாதம் தோறும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளும் , இந்த நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் பணிபுரியும், 10000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்கா சத்திரம் காஞ்சிபுரம் ஓரகடம் பூந்தமல்லியில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். 



இந்த தொழிற்சாலையில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு விடுதியில் தங்கி பணியாற்றி வரும் பெண்கள் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயாரித்ததால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. 

விடுதியில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக உணவு அளிக்க வேண்டும் என்பது குறித்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. 

அவர்களை குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்ட  சில பெண் ஊழியர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இந்நிலையில் 2 நபர்கள் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் செய்திகள் வேகமாக பரவியது.

இதனையடுத்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இரவு 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி வந்த 150க்கும் மேற்பட்ட பெண்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தின் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலை பெரிதும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் உடன் காணப்படுகிறது.

இதேபோல செங்கல்பட்டு ஓரகடம் சாலையில் அமைந்துள்ள  பகுதியில் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்து ஆதரவாகத்தான் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்துக்கு எதிராக கோஷமிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலைகள் ஸ்தம்பித்தது  போக்குவரத்து பாதிப்படைந்தது ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி, “2 பெண்கள் (கஸ்தூரி, ஐஷ்வர்யா) இறந்ததாக வெளியான தகவல் வதந்தி.

2 பெண் தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையிலுள்ள வீடியோ தவறாக பரப்பப்படுகிறது. பிற ஊழியர்கள் அனைவரும்கூட நலமாக உள்ளனர். டீஹைட்ரேஷன் ஆகி அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டிருந்திருக்கிறது. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களும் நலமாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட 116 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர் 

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பில் ஒப்பந்ததாரர் விடுதி காப்பாளர் விடுதி சமையல்காரி உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மூவரும் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் 

மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டக்காரர்களின் பெரும்பகுதியான பெண்கள் சமரசம் அடைந்து கலைந்து சென்ற நிலையில் சமரசம் அடையாத ஒரு சில பகுதியைச் சேர்ந்த பெண்கள் விடுதி காப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து வர வலியுறுத்தியுள்ளனர். 

வீடியோ காலில் காட்டிய பெண் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை எனவும் ஒரு தரப்பு குழுவினர் தெரிவிக்கிறார்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களை 300க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி உள்ளனர் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்க ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 

இது ஒருபுறமிருக்க மற்ற பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய பெண் தொழிலாளர்கள் கலைந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களும் போராட்டத்தை கைவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் காஞ்சிபுரம் காவல்துறை துணைத்தலைவர் சத்யபிரியா வேலூர் சரக துணை தலைவர் பாபு காஞ்சிபுரம் வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர்கள் என அரசு உயர் அதிகாரிகள் அனைவருமே இந்த போராட்ட களத்தில் கூடிய உறுதிப்படுத்தக் கூடிய பெண் தொழிலாளர்களும் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஊரக தொழில் துறை  அமைச்சர் அன்பரசன் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் சுங்கா சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கூடிய பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகிறார்கள் 

தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் அவர்கள் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பேசினர் பின்னர் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

மேலும் உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் மேலும் மன உளைச்சலில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு வாரத்திற்கு விடுப்பு வழங்க தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது தங்கள் ஊர்களுக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

வருவாய் துறை குழு அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் பஅமைக்கப்பட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் இருக்கக்கூடிய விடுதியில் இனி இதுபோன்று தவறு நடக்காமல் தடுப்பதற்கு கண்காணிக்கப்படும் என்றார் இதை தொடர்ந்து சுங்கா சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் 16 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

No comments

Thank you for your comments