Breaking News

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு...!

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  தாயார் குளம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், நகர அவைத் தலைவர் சந்துரு, மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், நகர துணை செயலாளர் ஜெகன்நாதன், முத்துசெல்ம், தசரதன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.






No comments

Thank you for your comments