டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு புகழஞ்சலி கருத்தரங்கம்
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ் சி பிரிவு சார்பாக இன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 75வது நினைவு தினம் மற்றும் புகழஞ்சலி கருத்தரங்கம் நடைபெற்றது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பாக சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 75வது நினைவு தினம் மற்றும் இவரின் புகழஞ்சலி கருத்தரங்கம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இன்று ( 06/12/2021) மதியம் 12 மணி அளவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு இ. திருமகன் ஈவெரா அவர்களின் கரங்களால் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அம்பேத்கர் அவர்களின் புகழஞ்சலி கருத்தரங்கம் நடைபெற்றது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ் சி பிரிவு தலைவர் கே.பி.சின்னசாமி, மாநில துணைத்தலைவர் குளம் எம். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை தலைவர்களான பா.ராஜேஷ் ராஜப்பா, கே.புனிதன், வி. எஸ் ஈஸ்வரமூர்த்தி, பாஸ்கர்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், விவசாய மாவட்டத்தலைவர் பி.ஏ. பெரியசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ், மண்டல தலைவர்களான ஆர்எஸ்ஐ அய்யூப் அலி என்கிற அம்புலி, ஆர் விஜயபாஸ்கர், டி.திருச்செல்வம், பொதுச் செயலாளர்களான டி.கண்ணப்பன், ஏ வின்சன்ட், இரா கனகராஜ், கராத்தே யூசுப், அன்பழகன், மாவட்ட செயலாளர் கதிர்வேல், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.விஜய்கண்ணா, ஈரோடு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஈ ஆர் எஸ் பிரகாஷ், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு தலைவர் வக்கீல் வினோத் மாரியப்பா, நிர்வாகிகளான கேஜே டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், குப்பண்ணா சந்துரு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என்.பாஷா, மொடக்குறிச்சி வட்டார முன்னாள் தலைவர் வி எம் கே செந்தில் ராஜா, இளைஞர் காங்கிரஸ் மாநில மாவட்ட பொறுப்பாளர்களான நா.கார்த்தி, செந்தூர் ராஜகோபால், டி.கல்கி முதலாம் மண்டல பொதுச்செயலாளர் டி.எம்.ஐ.சபீர்அலி மூன்றாம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், கறிக்கடை நூருத்தீன், சிவாஜி மன்ற நிர்வாகி வள்ளிபுரத்தான் பாளையம் எஸ். தங்கவேலு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகளான மாப்பிள்ளை மீரான், கார்த்திக், விவேகானந்தன், ஜூபேர் அஹமது, திருமதி ஆர் சுதா, அல்டிமேட் தினேஷ், வெற்றிச்செல்வன் முகமது அயூப், எஸ் பரணி, பஷீர் அலி உட்பட பலர் திரளாக கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
பின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களைப்பற்றிய புகழஞ்சலியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு இ. திருமகன் ஈவெரா அவர்கள் இககருத்தரங்கிள் இவரின் வரலாற்று புகழை பற்றி பேசினார்.

No comments
Thank you for your comments