Breaking News

பாஜக எதிரப்புக் கூட்டணியின் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வு செய்ய பிரசாந்த் கிஷோர் அழைப்பு

புதுடெல்லி, டிச.2-

தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பு கூட்டணியின் தலைவரை ஜனநாயக முறையில் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேர்தல் அணுகுமுறை பிரசாந்த் கிஷோர் இன்று (02/12/2021) டிவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.


2024ஆம் ஆண்டு அளவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்பொழுது பிராந்திய எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார்.

செவ்வாய்க் கிழமையன்று மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பைக்கு மம்தா பானர்ஜி சென்றார்.

மும்பையில் சிவசேனா கட்சியின் பேச்சாளர் சஞ்சய் ரவுத் மற்றும் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே யுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்

புதன்கிழமையன்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் அவருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

2009ம் ஆண்டு முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் தலைமையில் இயங்கியது அப்பொழுது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வியை சந்தித்தது அதன் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது கிடையாது.

எனவே பிராந்திய கட்சிகளை இணைத்து பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை நாம்தான் இப்பொழுது அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் அளிக்கலாம் .ஆனால் காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்க நாம் அனுமதிக்க முடியாது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவரை ஜனநாயகமுறையில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான தேசிய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்க முடியாது என்று நேரடியாக மம்தா பானர்ஜி கூறவில்லை .அதற்கு பதிலாக பாஜகவுக்கு எதிரான தேசியக் கூட்டணி தலைமை பொறுப்பை காங்கிரஸ் கையில் கொடுப்பதை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார்.

மும்பையில் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்தை. பிரசாந்த் கிஷோர் செய்தியாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின்  வலுவான கூட்டணிக்கு காங்கிரஸின் பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் என்ற உரிமையை யாருக்கும் தெய்வீக உரிமையாக விட்டுக் கொடுக்க இயலாது.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் 90 சதவீதம் தோல்வியைத்தான் காங்கிரஸ் சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஜனநாயக முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.




No comments

Thank you for your comments