Breaking News

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு புகார் மனு...

 காஞ்சிபுரம் :

அதிக பாரம் ஏற்றி செல்ல வற்புறுத்தும் எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மீதும், தரமற்ற எம்சாண்ட் தயாரிக்கும்  நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட7 மாவட்டங்களில் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் சாலையில் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் அதிக பாரம் ஏற்றிச் செல்ல மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் எம்சாண்ட் எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் இடம் அதிக பாரம் ஏற்றிச் செல்ல வற்புறுத்தி வருகின்றனர்.



மேலும் எம் சாண்ட் நிறுவனங்களின் லாரிகளில் அதிக பாரம் களை எடுத்துச் செல்வதாகும் இதனை தடுக்கும் போது எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மணல் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் மாநில தலைவர்கள் யுவராஜ், தீனன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள்,

கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலைகள் பழுதாகி, சாலை விபத்துக்கள் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும்,  

அதனால் அதிக பாரம் ஏற்றிச் செல்ல வற்புறுத்தும் எம்சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மீதும்,தரமற்ற எம்சாண்ட் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

No comments

Thank you for your comments