Breaking News

"அவ்வையார் விருது” பெற வேண்டுமா... உடனே விண்ணப்பிக்கவும்...

நாமக்கல்:

“ உலக மகளிர் தினமான மார்ச் 8-ல் அவ்வையார் விருது”  - 2022ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்  என்று  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழா 08.03.2022-ம் நாளன்று கொண்டாட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு மாநில அளவில் விருது ஒன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. 

2022-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருத்தல் வேண்டும். 

விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான சேவை புரிந்த விபரம் 1 பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பவேண்டும். விண்ணப்பதாரரின் உரிய கருத்துரு (BOOKLET – 2)   தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரம் வரவேற்கப்படுகிறது. மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

27.12.2021-க்குள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும், மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் அறை எண்.234, கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விபரம் தெரிந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது. 

மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்.04286-299460.

1 comment:

Thank you for your comments