Breaking News

808 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் - 7 பேர் கைது

மதுரை, டிச.22-

மதுரையில் 808 ரேஷன் அரிசி மூட்டைகள், 38 கோதுமை மூட்டைகள் கைப்பற்றப்பட்டன, இது தொடர்பாக சிவில் சப்ளைஸ் சி ஐ டி போலீசார் 7 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மதுரை மண்டலம், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மதுரை மாவட்ட வழங்கல் அதிகாரி  உத்தரவின் பேரிலும், மதுரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் காவல் ஆளினர்கள் பறக்கும் படை தாசில்தார் தலைமையில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்டம். இலமணூர் போஸ்ட், கல்மேடு அருகே மணிகண்டன் மற்றும் சோணைமுத்து ஆகியோருக்குச் சொந்தமான கட்டிடத்தில் 20.12.2021ம் தேதி இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேற்படி கட்டிடத்தின் உள்ளே 80 மூட்டைகள் (80 X 50) ரேசன் அரிசி மூட்டைகளும், 38 மூட்டைகளில் கோதுமைகளும் மற்றும் கட்டிட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 லாரிகளில் 808 ரேசன் அரிசி முட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் மேற்படி லாரிகள் அனைத்தும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு ரேசன் அரிசியை விநியோகம் செய்யும் லாரிகள் என தெரியவந்துள்ளது. மேற்படி லாரிகளின் உரிமையாளர் ஸ்ரீநாத் என்பவர் என்றும். இந்த லாரிகளில் ரேசன் கடைகளுக்கு செல்லும் ரேசன் அரிசியை ரேசன் கடைகளில் இறக்கியது போக மீதமுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை அதே லாரிகளில் கடத்தி வந்து மேற்படி குடோனில் பதுக்கி வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவருகிறது.

இவ்வழக்கில் கட்டிட உரிமையாளர்கள் இருவர் மற்றும் லாரி டிரைவர் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ரேசன் கடை விற்பனையாளர்கள் யார் யார் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான குற்றவாளியான ஸ்ரீநாத் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட 80,400 கிலோ ரேசன் அரிசி அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் வேறு யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மதுரை மண்டலம், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்,

No comments

Thank you for your comments