நகை கடை கொள்ளை வழக்கில் கைதான டீக்காராமன் சிறையில் அடைப்பு
வேலூர், டிச.22-
நகை கடை கொள்ளை வழக்கில் கைதான டீக்காராமன் நீதிமன்ற உத்தரவு படி 15- நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு. என்னை ஜாமினில் எடுக்க யாரும் வரமாட்டார்கள், என்ன எப்ப வெளியே விடுவிங்க என நீதிபதியிடம் வேண்டுகோள்...
வேலூர் நகைகடை கொள்ளை தொடர்பாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட டீக்காராமன் (26) என்ற இளைஞர் நேற்று வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை விசாரித்த நீதிபதி கொள்ளையில் ஈடுபட்ட டீக்காராமனை வரும் 04.01.2022-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து டீக்காராமனை காவல் துறை பாதுகாப்போடு அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டீக்காராமன் நீதிபதி முன் ஆஜர் படுத்திய போது கை கட்டைவிரல், இரண்டு கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு கட்டுப்போடப்பட்டிருந்தது. இது குறித்து நீதிபதி கேட்டபோது கொள்ளையில் ஈடுபடும் போது தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளான்.
மேலும் டீக்காராமனை யாராவது ஜாமினில் எடுப்பார்களா என நீதிபதி கேட்டதற்க்கு, என்னை கைது பண்ணது எங்க பெற்றோருக்கும் தெரியும். பொற்றோர் எனக்கு துணை இல்லை. என்னை ஜாமினில் எடுக்க யாரும் வரமாட்டார்கள். என்ன எப்ப வெளியே விடுவிங்க? என கேட்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு உதவி செய்ய இலவச சட்ட உதவி மையத்திற்க்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள பிரபல தனியார் நகை கடையான ஜோஸ் ஆலுக்காசில் கடந்த 15-ம் தேதி நள்ளிரவு சுவற்றை துளையிட்டு 16 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன்(26) என்ற இளைஞரை நேற்று முன்தினம் கைது செய்த தனிப்படை காவல் துறையினர் ஒடுக்கத்தூர் அடுத்த உத்திரகாவேரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் 3 இடங்களில் புதிக்கப்பட்டிருந்த நகைககளை மீட்டு பறிமுதல் செய்தனர்.
No comments
Thank you for your comments