மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியம் - ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்
வேலூர், டிச.22-
பிரதமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) 2021-22 கீழ் வேலூர் மாவட்டத்தில் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்காக கீழ்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்குவாரிகளில் மீன்வளர்த்தல்
கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்தல், கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்திட பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம்) மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிர்க்கு 60 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம்) வழங்கப்பட உள்ளது.
புதிய மீன்வளர்ப்பு குளங்கள்
புதிய மீன்வளப்பு குளங்கள் 1 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு செலவினம் என திட்ட மொத்த செவினம் ரூ.7 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத (அதிகபட்சமாக ரூ.2.80 லட்சத்து) மானியமும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிர்க்கு மகளிருக்கு 60 சதவீத (அதிகபட்சமாக ரூ.4.20 லட்சத்து) மானியமும் வழங்கப்பட உள்ளது.
பயோ பிளாக் முறையில் மீன்வளர்த்தல் ((BIO FLOCK)
பயோ பிளாக் முறையில் மீன்வளர்த்தல் (சிறிய அளகு) அமைத்திட மொத்த செவினத்தில் ரூ.7.50 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.3.00 லட்சம்) மானியமும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிர்க்கு மகளிருக்கு 60 சதவீத (அதிகபட்சமாக ரூ.4.50 லட்சத்து) மானியம் வழங்கப்பட உள்ளது.
நீரினை மறுசுழற்சிமுறையில் மீன்வளர்த்தல் (சிறிய அளவு) ((RAS))
நீரினை மறுசுழற்சிமுறையில் சிறிய அளகு அளவிலான தொட்டிகள் அமைத்து மீன்வளர்த்தல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மொத்த செவினம் ரூ.7.5 0 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.3.00 லட்சம்) மானியமும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிர்க்கு 60 சதவீத (அதிகபட்சமாக ரூ.4.50 லட்சத்து ) மானியமும் வழங்கப்பட உள்ளது.
கிஷான் கடன் அட்டை (KCC)
மீன்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல், மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின்படி வங்கிகள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்/ மீன் சார்ந்த தொழில் செய்பவர்கள் அனைவரும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவராவார்கள்.
விண்ணப்பங்கள்
மேற்கண்ட மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மீன்வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மீன்வளர்ப்பு திட்டங்களில் பயன் பெற விரும்புபவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (கைபேசி எண்.9384824485) தொடர்பு கொண்டு 2 வாரங்களில் உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேலூர்- 600 007 (அலுவலக தொலைபேசி எண். 0416- 2240329 மின்னஞ்சல் adfifvellore1@gmail.com என்ற அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments