Breaking News

முன்னாள் முதலமைச்சர் ஜெ.,வின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோடு, டிச.5-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில்  முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி இராமலிங்கம் தலைமையில்,  பகுதி கழக, ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், ஈரோடு பெருந்துறை சாலை யில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.  

இதில்  முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின்  முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி நினைவு அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  

இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, ஒன்றிய,  பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி வார்டு, கிளைக் கழகம், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அதிமுக தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


No comments

Thank you for your comments