Breaking News

மதுபோதையில் சாக்கடைக்குள் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

ஈரோடு :

ஈரோடு திருநகர் காலனி பகுதியில்  சாக்கடைக்குள் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. விவரமறிந்து  அங்கு விரைந்து சென்ற போலீசார்  இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 

இதில், இறந்தவர்  கருங்கல்பாளையம் பச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜா(26) என்பதும்   இரவு நேரத்தில்  அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு சாக்கடை திட்டில் உட்கார்ந்திருந்தபோது  தவறி விழுந்துள்ளார்.  

மேலும் சாக்கடைக்குள் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து காவல்துறையினர்  ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments