Breaking News

காட்பாடியில் கத்தியைக் காட்டி பெண்களிடம் 14 சவரன் செயின் பறிப்பு

வேலூர்:

வேலூர் மாவட்டம்  காட்பாடியில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி பெண்களிடம் 14 சவரன் செயின் பறிப்பு.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்..

காட்பாடி கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிகாமணி அவருடைய மனைவி ராணி மற்றும் ரமேஷ் அவருடைய மனைவி கோமதி இவர்கள் இருவரும் கல்புதூர் பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென இவர்கள் இருவரையும் வழிமறித்து பட்டப்பகலில்  கத்தியைக் காட்டி இருவரின் கழுத்தில் அணிந்திருந்த 14 சவரன் தங்க தாலிச் செயினை பறித்துள்ளனர்.

உடனடியாக இருவரும் திருடன் திருடன் என கூச்சலிட கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மர்ம நபர்களும் தப்பியோடியுள்ளனர் 

இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து காட்பாடி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண்களிடம் கத்தியை காட்டி செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments

Thank you for your comments