மதுபாட்டில்களை விற்பனை செய்த 47 பேர் கைது...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்..... மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல் துறையினர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 47 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 293 மது பாட்டில்கள் மற்றும் 73 லிட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த யோக குமார் என்பவரது மகன் சுரேஷ்(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தும், மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும். மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 22 நபர்களைகைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2.78 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் கவியரசு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 7நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சேவல்-1 மற்றும் ரூ.3380/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் எச்சரித்துள்ளார்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments