Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், மணிமஙகலம் மற்றும் ஒரகடம் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியான 

1 ) வாசு ( எ ) வாசுதேவன் ( 21 ) த / பெ.பூபதி, எண்.12, அண்ணா தெரு, நாட்டரசன்பட்டு கிராமம், குன்றத்தூர் தாலுக்கா, 

2 ) வசந்த் ( எ ) ஷார்ப் வசந்த் ( 21 ) த / பெ.சரவணன், எண்.334 / A, மூர்த்தி நகர் இரண்டாவது தெரு, ராம்ஜி நகர், பனப்பாக்கம் கிராமம், குன்றத்தூர் தாலுக்கா மற்றும்

3 ) முத்துப்பாண்டி ( 23 ) த / பெ.ரவிச்சந்திரன், எண்.2 /11, கங்கையம்மன் கோயில் தெரு, வட்டம்பாக்கம் கிராமம், குன்றத்தூர் தாலுக்கா 

ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ( 26.12.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  டாக்டர் ஆர்த்தி  அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments

Thank you for your comments