Breaking News

ரேஷன் கடையில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு

ஈரோடு:

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடையில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று த.மா.க.வினர்  மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (20.12.2021)  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.  இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் வழங்கினர்.   

அதில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விடியல்சேகர் தலைமையில் நிர்வாகிகள் பலர்   மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.  

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக தற்சார்பு கொள்கைக்கு வழிவகுக்கக் கூடிய நமது மண்ணில் விளையக்கூடிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.


மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் ரபிக், தொண்டர் அணி தலைவர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments