Breaking News

3 நாட்களுக்கு பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் குறைதீர் முகாம்

தருமபுரி:

மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில்  மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்கள்.

எனவே 15.12.2021, 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய நாட்களில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்குறிப்பட்டுள்ள இடங்களில் நடைபெற உள்ள  இச்சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் அந்தந்த வட்டங்களுக்குட்பட்ட  பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை  மனுக்களாக  நேரில் வழங்கி  பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments