Breaking News

வனத்துறையால் திட்டமிட்டு கொலை செய்யபட்ட கூலி தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை...

 தருமபுரி

ஆந்திர வனத்துறையால் திட்டமிட்டு கொலை செய்யபட்ட கூலி தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மேலும் ஆந்திரா வனத்துறை மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம்  அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை  கிராமத்தலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ,  50  கூலி தொழிலாளிகள் கட்டிட தொழிலுக்காக  கோவைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது இடைத்தர்கள் அவர்களை மூலை சலவை செய்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு செம்மரம் வெட்ட  அழைத்து சென்றனர்.   

அதில் ராமன் என்பவர்  இறந்த நிலையில்  அவரது உடல் சித்தேரி  மலைகிராமம் அருகே வீசி சென்றுள்ளனர். அதே போல்  ஆந்திராவில் பாலகிருஷ்ணன்  என்பவரின் தலையில் வெட்டப்பட்ட நிலையில் இறந்துள்ளார்.     இருவரும் இறந்தது குறித்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று கள ஆய்வு செய்தனர்.   

பின்னர் தருமபுரியில்   அந்த ஆய்வினை 66 பக்க  அறிக்கையாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் வெளியிட்டார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

ராமன், பாலகிருஷ்ணன் இருவரும், சமீபத்தில் ஆந்திர வனத்துறையால் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

கூலி தொழிலாளிகளின் மனைவிகள் தற்போது வாழ்வாதத்திற்கு வழியின்றி விதவைகளாக தவித்து வருகின்றனர், சம்மந்தபட்ட இந்த குடும்பத்தினருக்கு உடனடியாக தமிழக அரசு இழப்பீடு  வழங்க வேண்டும், மலைவாழ் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் சித்தேரி மலை கிராமம் உள்ளிட்ட மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்து கொடுக்கவேண்டும், தவிர இந்த சம்பவத்தில்  ஏ டி ஜி பி அந்தஸ்த்தில் உள்ள நேர்மையான உயர் காவல்துறை அதிகாரி நியமித்து, ஆந்திர வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைப்பதாக தெரிவித்தார். 

மேலும் இது தொடர்பாக, தாங்கள் பல இடங்களுக்கு நேரில் சென்று  பாதிக்கபட்டவர்களை சந்தித்தும் பல்வேறு ஆதாரஙகளுடன் புலனாய்வு செய்து 66 பக்க அறிக்கையினை தயார் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கையினை ஊடகங்கள் வாயிலாக முதலில் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட துறை அதிகாரிகள், முதலமைச்சருக்கு தங்களின் அறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும், அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி நடந்தது என்ன என்பது குறித்து முழு உண்மையை வெளி கொண்டு வரவேண்டும், 

இது தவிர இந்த சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை  சந்திக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.. அப்பாவி மலைவாழ்  கூலித்தொழிலாளர்களை ஆசை வார்த்தைகளை கூறி செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் புரோக்கர்களை கண்டுபிடித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைவாழ் இன மக்களின் வாழ்வாதரத்திற்கு வழி செய்கின்ற வகையில் அரசு சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு  இந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்ய வேண்டும், இனி வரும் காலங்களிலாவது இது போன்ற சம்பவங்கள் தொடாராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments