அரசு பணிகளில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு... நன்றி தெரிவித்து 200க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பேரணி
காஞ்சிபுரம்:
சிலம்பம் வீரர்களுக்கு அரசு பணிகளில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர்க்கு நன்றி தெரிவித்து 200க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் காஞ்சிபுரத்தில் பேரணியாக சென்றனர்.
தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த சிலம்பாட்டத்தினர்க்கு தமிழக அரசு பணிகளில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே துவங்கிய பேரணி காமராஜர்நகர், மூங்கில் மண்டபம், மேட்டு தெரு வழியாக ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும், ஒமக்ரைன் வைரசிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் தடுப்பூசி பேட்டுக்கொள்ள வேண்டும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரணியானது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறைவடைந்து. பேரணிக்கு தலைமை வகித்த தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் செவிலிமேடு மோகன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
No comments
Thank you for your comments