காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி வேண்டுகோள்
புதுடெல்லி, டிச.28-
வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தங்களுக்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியாகாந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் கொள்கைகளை மறைமுகமாக தாக்கி பேசினார். அவரது பேச்சின் விபரம் வருமாறு :
இந்திய ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. அது ஒரு இயக்கம். அதன் தலைவர்கள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு இன்னல்கள் சந்தித்துள்ளனர். சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். தங்கள் வாழ்வையே அவர்கள் இழந்துள்ளனர். ஆனால் நாட்டை பிளவு படுத்தும் வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தவாதிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை. தற்போது அந்த சிந்தாந்தம் நமது சமூகத்தின் மதசார்பற்ற கட்டமைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை. இந்திய அடித்தளத்தின் மீதே தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுகின்றன. நமது பண்பாடு சிதைக்கப்படுகிறது. பொதுமக்கள் பயம் மற்றும் பாதுகாப்பில்லா உணர்வுடன் வாழ்க்கின்றனர். இவ்வாறு சோனியா காந்தி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.
Today, we rededicate ourselves to the ideals, values & principles of our organisation that has been shaped, guided and inspired by some of the greatest, noblest and most selfless of Indians of the 20th Century.- Congress President Smt. Sonia Gandhi#CongressFoundationDay pic.twitter.com/ySW4SgYr45— Congress (@INCIndia) December 28, 2021
LIVE: Congress President Smt. Sonia Gandhi hoists the Congress party flag at the AICC HQ on the occasion of the 137th #CongressFoundationDay. https://t.co/tWeCi02nPn
— Congress (@INCIndia) December 28, 2021
Congress President Smt. Sonia Gandhi greets fellow Congress men & women on the occasion of the 137th #CongressFoundationDay celebrations at the AICC HQ.
— Congress (@INCIndia) December 28, 2021
Today, we rededicate ourselves to our party's values, principles & ideals- which put our people & our nation first, always. pic.twitter.com/e2XRipXXxJ
No comments
Thank you for your comments