Breaking News

நன்னடத்தை பிணையை மீறிய கள்ளச்சாராய வியாபாரிக்கு 271 நாட்கள் சிறை

காஞ்சிபுரம், டிச.17-

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்நிலையங்களில் பல்வேறு கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி 

கணேசன் ( 52 ) த / பெ.பொண்ணுக்கண்ணு, மாரியம்மன் கோயில் தெரு, வெங்குடி, காஞ்சிபுரம் என்பவரை 110 குவிமுச - வின் படி ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 13.09.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் மேற்படி , கணேசன் என்பவர் 09.12.2021 அன்று வெங்குடி கிராம சுடுகாடு அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தது சம்மந்தமாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

எனவே, மேற்படி நபர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 271 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments