Breaking News

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்டதால் 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை

காஞ்சிபுரம், டிச.17-

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான 


1 ) சதீஷ் ( எ ) ஒட்டசதீஷ் ( 23 ) த/பெ.காளிதாஸ், எண்.51, வ.ஊ.சி தெரு, பல்லவர்மேடு மேற்கு, காஞ்சிபுரம் மற்றும் 

2 ) கோகுல் ( எ ) ஜெய்மோகன் ( 28 ) த/பெ.லட்சுமிநரசிமமன், எண்.59/56, பல்லவர்மேடு மேற்கு, காஞ்சிபுரம் 

ஆகியோரை 110 குவிமுச - வின் படி ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 16.11.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் மேற்படி, சதீஷ் ( எ ) ஒட்டசதீஷ் மற்றும் கோகுல் ( எ ) ஜெய்மோகன் ஆகியோர் 23.11.21 அன்று தனது கூட்டாளிகளுடன் பெரிய காஞ்சிபுரம், ராயன்குட்டை பள்ளத்தெருவைச் சேர்ந்த குமார் (48) த/பெ.கருணாநிதி என்பவரை கொலை முயற்சி செய்தது சம்மந்தமாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 

எனவே, மேற்படி நபர்களை நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 338 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments