கொள்ளையடித்த கும்பலை 24 மணி நேரத்தில் பிடித்த காவலர்களுக்கு டிஐஜி பாபு , எஸ்.பி., பாராட்டு
ஆம்பூர் :
ஆம்பூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கிலி என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி கனகராஜ் என்பவரின் காரை வழிமறித்த கும்பல், போலீசார் என கூறி 1.5 லட்சம் வழிப்பறி நடைபெற்றது.
அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டகொள்ளையர்கள் சொகுசு கார் பெங்களூரூ−சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சொகுசு காரை துரத்தி பிடிக்க முயன்றபோது ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவற்றில் மோதியது.
காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்த ஆம்பூர் காவல் துறையினர் காரை சோதனை மேற்கொண்டனர் காரில் இருந்து இரண்டு பைகளில் கட்டுகட்டாக பணம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரில் இருந்த பெருமாள், சீனிவாசன், சதிஷ் ஆகிய 3 பேரை ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் காவல்துறையினர் போல் நடித்து கள்ள நோட்டுகளை மாற்றுவது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டு வந்த சரத், சதிஷ் , தினகரன் ஆகிய மூன்று பேரையும், மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார், 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்
மேலும் வழிப்பறி புகார் அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டுப்புடவை வியாபாரியிடம் கொள்ளையடித்த கும்பலை 24 மணி நேரத்தில் பிடித்த ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் தலைமையிலான காவலர்களுக்கு வேலூர் சரக டிஐஜி திரு.பாபு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
No comments
Thank you for your comments