Breaking News

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் திடீர் தீ விபத்து - பொருட்கள் எரிந்து சேதம்!

ஆம்பூர் :

ஆம்பூர் அருகே தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஏடிஎம் இயங்கி வருகிறது. இது தவிர, முதல் தளத்தில் உதவி ஆணையர் (வணிக வரி அலுவலகங்கள்) செயல்பட்டு வருகிறது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் புகை வருவதை அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் பார்த்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், மளமளவென வங்கி முழுவதும் பரவியது.

தீ மளமளவென வாங்கி முழுவதும் பரவியதால் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த 6 குளிர்சாதன பெட்டிகள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த  மின்சார துறையினர் வணிக வளாகம் முழுவதும் மின் இணைப்பை துண்டித்தனர். 

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments