Breaking News

காவேரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்...

தருமபுரி, டிச.16-

காவேரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டமாநாடு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தருமபுரி மாவட்ட 23-ஆவது  மாநாடு அரூர் என்ஆர்வி திருமணமண்டபத்தில் தோழர் எம்.ஆறுமுகம் நினைவரங்கத்தில் வியாழக்கிழமை துவங்கியது.

செங்கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி ஏற்றிவைத்தார். 

மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.முத்து ,வி.மாதன், மாவட்டகுழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ஆகியோர் தலைமைவகித்தனர்.

மாவட்டசெயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் பி.டில்லிபாபு வரவேற்றார். மாநிலசெயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மாநாட்டை துவக்கிவைத்து  பேசினார்.

மாவட்டசெயலாளர் ஏ.குமார் அரசியல் அமைப்பு நிலை அறிக்கை வாசித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் வரவுசெலவு அறிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து  அறிக்கையின் மீது பிரிதிநிகள் விவாதித்தனர்.

தீர்மானம் 

தருமபுரி மாவட்டம் மாநில சராசரி வளர்ச்சியை எட்டும் வரை மத்திய மாநில அரசுகள் பட்ஜெட்டுகளில்  ரூ 500 கோடி ஒவ்வெரு ஆண்டும்  ஒதுக்கீடு செய்யவேண்டும்.காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

தருமபுரியில் சிப்காட் ,வட்டம் தோரும் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல் ,ஜவ்வரிசி,பழச்சாறு ஆலை போன்ற வேளாண் சார்பு தொழிற்சாலைகளை தொடங்கவேண்டும்.தருமபுரி -மொரப்பூர் ரயில் இணைப்புக்கான இருப்பு பாதை அமைக்கவேண்டும்.

ஒகேனக்கல் நீர்மின் திட்டத்தை அமுலாக்க வேண்டும்.கே.ஆர்.பி,அனையின் வலதுபுறக்கால்வாய் மொரப்பூர் வரை நீட்டித்து மழைகாலங்களில் வரும் உபரிநீரை ஏரிகளில் நிரப்பவேண்டும். 

செனாக்கல்,கல்லாறு அனைகட்டு திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.அனைத்து சிற்றுராட்சிகளிலும்  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கவேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநாட்டின் நிகழ்வாய் அரூர் பஸ்நிலையத்தில்  நடைபெற்ற கொடியேற்று நகிழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பி.குமார்  தலைமைவகித்தார்.

செங்கொடியினை மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன்‌ ஏற்றிவைத்தார். அரூர் பஸ்நிலையத்தில் தொடங்கிய செந்தொண்டர்‌ அணிவகுப்பு மாநாட்டு மண்டபத்தை வந்ததடைந்தது.

தோழர்கள்‌ எம்.அண்ணாமலை, தேவ.பேரின்பன், கே.எம்.ஹரிபட், எம்.ஆறுமுகம் , எம்.ராஜேந்திரன், எஸ்.பி.சின்னராசு,எம்.கே.மாதப்பன் ஆகியோரின்‌ நினைவு ஜோதி பயணம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

No comments

Thank you for your comments