Breaking News

தொலைந்து போன 217 செல்போன்கள் மீட்பு... உரிய நபர்களிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து தொலைந்து போன 217 செல்போன்கள் மீட்பு.

உரியவர்களிடம் ஒப்படைத்த காஞ்சிபுரம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் செல்போன்களை தொலைத்தவர்கள் ஏராளமானோர் புகார் அளித்து உள்ளனர்.

இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்க  காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பல்வேறு உக்தி  நடவடிக்கைகளை மேற்கொண்டு  217 செல்போன்களை கண்டுபிடித்து மீட்டனர்.

மாவட்டம் முழுவதிலிருந்தும் கண்டுபிடித்து மீட்கப்பட்ட செல்போன்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தொலைத்தவர்களிடம் செல்போன்கள் ஒப்படைத்தார்.





No comments

Thank you for your comments