Breaking News

2022 - ம் ஆண்டு புத்தாண்டு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் :

2022 - ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பாக புத்தாண்டு தினத்தைக் கொண்டாட மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்ககூடும் என்பதால் பொதுமக்கள் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கூடவோ, கேக் வெட்டி பட்டாசு வெடித்து புத்தாண்டினை கொண்டாடக்கூடாது.


ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டை வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. 

அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது.

ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. 

ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஓட்டல் நிர்வாகம்  கண்காணித்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். 

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டு மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனம் மூலம் விதிமீறல்களில் ஈடுபடுவோர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

GWT மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்கள் பந்தயங்களில் ஈடுபடக்கூடாது.

சென்னையில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதிவேகமாகவும், மதுபோதையிலும் வாகனம் ஒட்டி வருவபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு GWT சாலையில் பேரிகாட் வைத்து வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தவும், திருபெரும்புதூர் Toll Plaza, வல்லக்கோட்டை சந்திப்பு, பொன்னேரிக்கரை சந்திப்பு, கீழ்அம்பி சந்திப்பு, படப்பை சந்திப்பு, ஓரகடம் சந்திப்பு, வாலாஜாபாத் சந்திப்பு ஆகிய இடங்களில் Breath analyzer உடன் வாகன சோதனையில் ஈடுபட காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

குடிபோதையில் மற்றும் அதிவேகமாக வாகனம் ஒட்டுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும், ஒட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்டிப்பாக வாகன ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிந்தும், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்தும் பயணம் செய்ய வேண்டும், தங்கும் விடுதி மற்றும் கேளிக்கை மன்றம் ( Resorts ) உரிமையாளர்கள் / மேலாளர்கள் தங்களது விடுதி / கேளிக்கை மன்றங்களில் உரிய விவரம் இல்லாத நபர்களை தங்கவைக்க கூடாது. 

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்த தகவல்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால் ரோந்து காவலர்கள் மூலம் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும், 

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கண்ணியமற்ற முறையில் மற்றும் அநாகரீகமாக செயல்களிலும் ஈடுபடுவோர். பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் நலநன பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், DJ, இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. 

கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை ( SOP ) பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனாரா என கண்காணிக்க வேண்டும்.மேலும் , அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி அனைத்து நுழைவு வாயில்களிலும் அகச்சிவப்பு ( Infra Red ) மற்றும் Thermal Scanner கருவிகளை கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும். 

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் 31.12.2021 அன்று இரவு முக்கிய இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து சென்றும், கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்த்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments

Thank you for your comments