பொன்னேரி கரையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் எல்லை மீறும் மதுப் பிரியர்கள் அட்டகாசம்
காஞ்சிபுரம்:
ரூ. 54 கோடி மதிப்பீட்டில் பொன்னேரி கரையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் எல்லை மீறி உள்ளது. மதுப் பிரியர்கள் கூடாரமாகவும் விளங்கி வருகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் ரயில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கடும் அவதியுற்று வருகின்றனர்.
மேம்பாலத்தின் மீது மது அருந்தும் மது பிரியர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனவும் மேம்பால பணிகளை விரைவாக முடித்து பொதுப் போக்குவரத்தை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments