குற்ற செயலில் பயன்படுத்திய உரிமை கோராத 2000க்கு மேற்பட்ட வாகனங்கள் ஏலம்... காஞ்சிபுரம் காவல் துறையினர் அறிவிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சியில் களவாடப்பட்ட மற்றும் குற்ற செயலில் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை உரிமை கோராத வாகனங்களை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஏலம் விடப்படும் என காஞ்சிபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் செயல்படும் 14 காவல் நிலையங்களில் வாகன விபத்து, குற்ற செய்யலில் பயன்படுத்திய மற்றும் உரிமை கோராத வாகனங்களை காவல்துறைத் தலைவர் அறிவுரையின்படி காட்சிப்படுத்தி அதை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப்படை மைதானத்தில் 1800 க்கும் மேற்பட்ட வாகனங்கள் காட்சிபடுத்தபட்டுள்ளது.
இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் வாகனங்கள் தொலைத்தவர்கள் தங்கள் வாகனம் என உரிய ஆவணங்களுடன் காவல்துறையிடம் சமர்ப்பித்தால் வாகணங்கள் திருப்பித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வாகன விபத்தில் சிக்கிய வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என அனைத்தும் உள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் 2000க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படும் என காஞ்சிபுரம் காவல்துறையினர் அறிவித்தனர்.
No comments
Thank you for your comments